கரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரா எல்லையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஏனாம் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சிவராஜ் மீனா பிறப்பித்துள்ளார்.
![Yanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-01-yenam-pressrelease-7205842_20032020105348_2003f_1584681828_622.jpg)
மேலும், ஏனாம் பகுதியில் உள்ள பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், திருமணக் கூடங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் கூடக் கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, புதுச்சேரி - ஆந்திர எல்லையான மாஹேவில் 144 தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'என் குடும்பத்துல இருக்குற மத்தவங்களுக்கு பரவக் கூடாது'; விருந்தினர் மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்ட மகனை மறைத்து வைத்த தாய்!