சீதாப்பூர் மாவட்டம் மிஸ்ரிக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியா (13). இவர் நேற்று மதியம் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் ஆறு பேர் சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுசெய்து அதை செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்துள்ளனர்.
பின்னர் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் எனச் சிறுமியை மிரட்டியுள்ளனர். இதையடுத்து, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக, மிஸ்ரிக் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து இளைஞர்கள் ஆறு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:நிலத் தகராறு: தொழிலதிபர் கொலை!