நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் மே மாதம் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டது.
அப்போது நாட்டிலுள்ள விமான நிறுவனங்களில் மூன்றில் ஒரு விழுக்காடு மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு, பின்னர் அவற்றின் சேவை படிப்படியாக அதிகரிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோடைக்கால அட்டவணையில் 60 விழுக்காட்டு விமான நிறுவனங்கள் இயங்கின. தற்போது வரையறுக்கப்பட்ட குளிர்கால அட்டவணை 2020இல் வாரத்திற்கு 12 ஆயிரத்து 983 விமானங்களை இயக்கப்படவுள்ளன.