இந்தியாவில் குழந்தைகளை வேலைக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம். குழந்தைத் தொழிலாளிகளைத் தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், சில நிறுவனங்கள் சட்டவிரோதமாகத் தொடர்ந்து குழந்தைகளைத் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளனர்.
இந்நிலையில், குஜராத்தின் சூரத்தின் பகுதியில் குழந்தை தொழிலாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையத்துக்கும் ராஜஸ்தான் காவல் துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அவர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்ட 125 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: "ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்" - நெட்டிசன்கள் பாராட்டு