ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்ட சிறையில் 119 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தானில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ஜெய்ப்பூர் உள்ளது.
ஏற்கனவே ஜெய்ப்பூர் சிறையில் ஆறு கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில், தற்போது புதிதாக 119 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 125ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிறையில் உள்ள கண்காணிப்பாளர் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, காவலர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நேற்று (மே 16) ஒரே நாளில் 131 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதில் 119 பேர் ஜெய்ப்பூர் மாவட்ட சிறையை சேர்ந்தவர்களாகும்.
மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 960ஆக உயர்ந்துள்ளது. 126 பேர் அங்கு உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:கோவிட்-19: பெண் கைதிகளுக்கான சிறைச்சாலைகளின் சுகாதார நிலை என்ன? மகளிர் ஆணையம் கேள்வி