உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 108 வயதான ஹேம்ராஜ் பாஸ்வான் வாக்களிக்க உள்ளாா். இதில் கவனிக்க கூடிய ஒன்று இவா் இந்தியா சுகந்திரம் அடைந்து, அப்போது நடந்த முதல் மக்களவை தேர்தலிலும் வாக்களித்து உள்ளாா் என்பது தான்.
பாஷ்வான் இது வரை நடந்துள்ள அனைத்து தேர்தலிலும் வாக்களித்து உள்ளாா்.
இது குறித்து அவா் பேரன் கூறுகையில், அவா் இது வரை நடந்த அனைத்து தேர்தலிலும் அவா் வாக்களித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது எனவும், அவா் ஒரு கட்சி சாா்ந்தவா் இல்லை எனவும், ஆனால் எப்போதும் ஏழைகளுக்காக உழைக்கும் கட்சிக்கே வாக்களித்து இருப்பதாகவும் கூறினாா்.
இனி வரும் தேர்தல்களிலும் அவா் நன்றாக இருந்தால் வாக்களிப்பாா் எனவும் கூறினாா்