கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அரசு நடத்தும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் அஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சிறப்பாக அமைக்கப்பட்ட மருத்துவ வாரியமானது, மூதாட்டியை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தது. சில சமயங்களில் மூதாட்டியின் உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், மூதாட்டி பீவி கரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேலும், மூதாட்டிக்கு தனது மகளிடம் இருந்து இந்த தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது. கேரளாவின் மிகவும் வயதான நோயாளியாக பீவி கருதப்பட்டார்.