டெல்லி கண்டோன்மன்ட் பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தற்காலிக மருத்துவனையில் ஏற்பட்ட படுக்கை தட்டுபாடு காரணமாக தற்போது ஆயிரம் படுக்கைகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதில் 250 அவசர ஐசியூ படுக்கைகளும் அடங்கும்.
வெறும் 15 நாள்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தற்காலிக மருத்துவமனையிலுள்ள வார்டுகள் அனைத்தும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இறந்த உடலுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை!