ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள கோசாலாவில் நூறு மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த மாடுகள் இரவு சாப்பிட்ட தீவனத்தில் விஷம் கலந்திருக்கலாம் என கோசாலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மேலும் பல மாடுகளின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான மாடுகளை உடற்கூறாய்வு செய்த பின்புதான் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என விலங்குகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.