மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் சைதன்யா கங்காதர் (11) என்ற சிறுவன் தனது தாயின் செல்ஃபோனை வைத்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். சிறிது நேரத்தில் சார்ஜ் குறைந்து செல்ஃபோன் அணைந்துள்ளது. இதனால் அச்சிறுவன் செல்போனிலிருந்து பேட்டரியை வெளியில் எடுத்துள்ளான்.
உப்பிய நிலையிலிருந்த அந்தப் பேட்டரியை அச்சிறுவன் ஆர்வக்கோளாறில், ஓர் கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்துள்ளான். கல்பட்ட வேகத்தில் பேட்டரி டமார்... என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அச்சிறுவனின் வலது கை படுகாயமடைந்து சிதைந்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அச்சிறுவனின் தாய், அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பேட்டரி வெடித்ததில் சிறுவனின் கை மிகவும் சிதைந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. தற்போது அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: