கரோனா அறிகுறிகள் இருப்போரை வீடுகளில் தனிமைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 நபர்கள் அங்கிருந்து தப்பித்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தத் தகவல் அறிந்த மருத்துவக் குழுவினர் குர்மித்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் விரைவாக செயல்பட்ட காவல் துறையினர் தப்பித்த 10 நபர்களையும் கைது செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் கரோனாவால் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் குணமடைந்தும், மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி 74, 533 பேர் கண்காணிப்பு!