ETV Bharat / bharat

கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத்தில் 10 பேர் அனுமதி! - corona virus west bengal 10 suspected cases

கொல்கத்தா: கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் 10 பேர் அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டனர்.

west bengal
west bengal
author img

By

Published : Mar 15, 2020, 7:46 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசைத் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் வேளையில், இன்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பெலிகாடா ஐடி, பிஜி ஆகிய மருத்துவமனைகளில் கோவிட்-19 அறிகுறிகளுடன் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருப்பதாகக் கூறிய மூத்த சுகாதாரத் துறை அலுவலர்கள், "அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் தனியறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும்" தெரிவித்தனர்.

கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு, மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், பொதுத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனாவால் டென்மார்கில் முதல் உயிரிழப்பு - மூடப்படும் எல்லைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.