மேற்கு வங்க மாநிலம், மால்டா பகுதி தேசிய நெடுஞ்சாலை 34இல் கரக்பூரிலிருந்து பீகாரின் பூர்னியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்துதில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்து, பத்து பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர், அவர்களை மீட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிகப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும படிங்க: ராஜஸ்தானில் ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 24 பேர் உயிரிழப்பு