இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியால், எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என லான்செட் மருத்துவ இதழில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை இரண்டாம் கட்டச் சோதனையில் தீர்மானிக்க முடியாது. இருப்பினும், கோவாக்சின் தடுப்பூசியால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பை முழுவதுமாக தீர்மானிக்க, விரிவான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது. குறைந்த அளவிலே சீரம் மாதிரிகள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை மேற்கொள்ளமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதே சமயம், இந்த ஆய்வு அறிக்கையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும், எந்த வயதினர் கலந்துகொண்டார்கள் என்ற தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2020 நவம்பர் பிற்பகுதியில் ஐ.சி.எம்.ஆர், பாரத் பயோடேக் இணைந்து நடத்திய 3ஆம் கட்ட சோதனை, 21 தளங்களில் மொத்தம் 25 ஆயிரத்து 800 நபர்கள் மீது நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கரீபியத் தீவுகளுக்கு ஒரு வாரத்தில் 1.75 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா