ஹைதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உடன் ஹைதராபாத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது கோவிட் தடுப்பூசி குறித்து விவாதிக்கப்பட்டது. பாரத் பயோடெக் கோவிட் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) - தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) இணைந்து உருவாக்கியுள்ளது.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெக்கிற்கு சென்று கோவாக்சின் நிலையை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தின் ஜீனோம் வேலியிலுள்ள பாரத் பயோடெக் வசதிக்கு பல நாடுகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் 70 நாட்டு தூதர்கள் வருகை புரிந்தனர்.
பாரத் பயோடெக் தலைவருடன் நடந்த ஆலோசனையின் போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, “கோவாக்சின் பணிகள் மற்றும் ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் இடையேயான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.
இதையும் படிங்க: கோவாக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனை : தன்னார்வலர்கள் கிடைக்காமல் திண்டாடும் எய்ம்ஸ்!