ETV Bharat / bharat

பாரத பந்த்- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ; 80 ரயில் சேவைகள் ரத்து

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(ஜூன் 20) நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 80 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

author img

By

Published : Jun 20, 2022, 1:40 PM IST

பாரத பந்த்- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ; 80 ரயில்கள் ரத்து

டெல்லி: மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அக்னிபாத் எனும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் முறையை மாற்றி அமைத்து அரசின் பளுவை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு பணி நிரந்தரமின்மை மற்றும் ஓய்வுதியம் இல்லாமை போன்ற குறைகள் இருப்பதாக கூறி நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று காங்கிரஸ் கட்சி மற்றும் சில அமைப்புகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.

ராகுல் காந்தி மீதான ஹெரால்டு வழக்கு மற்றும் டெல்லியில் எதிர்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டது போன்ற காரணங்களுக்காகவும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தீவிரமடையாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் முக்கிய சாலைகள் வெறுச்சோடி காணப்படுகிறது.

போராட்டத்தையொட்டி 80 ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அக்னிபத் திட்டம் குறித்த வதந்தி - 35 வாட்ஸ் அப் குரூப்களுக்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.