ஜெய்ப்பூர் : 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த நிலையில் தேர்தல் தள்ளிவைக்கபப்ட்டது.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பாஜக 115 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் தாண்டிய நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மகந்த பாலக்நாத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் தேர்வு செய்யும் சட்டமன்ற குழு ஆலோசனைக் குழு ஜெய்ப்பூரில் கட்சி அலுவலகத்தில் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
-
#WATCH | BJP names Bhajanlal Sharma as the new Chief Minister of Rajasthan pic.twitter.com/j3awHnmH7k
— ANI (@ANI) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | BJP names Bhajanlal Sharma as the new Chief Minister of Rajasthan pic.twitter.com/j3awHnmH7k
— ANI (@ANI) December 12, 2023#WATCH | BJP names Bhajanlal Sharma as the new Chief Minister of Rajasthan pic.twitter.com/j3awHnmH7k
— ANI (@ANI) December 12, 2023
இதையும் படிங்க : கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! என்ஐஏ கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல்!