பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தன்னை சகோதரர்கள் இருவர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து, இஸ்லாமியத்திற்கு மாறக்கோரி வற்புறுத்தியதாக, அந்நகர சன்னம்மன்னா கிரே அசுகட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஷபீர் அகமது என்பவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரது சகோதரர் முகமது ரில்வானைத் தேடி வருகின்றனர்.
காவல் துறையினிடம் அளித்து புகாரின்படி, கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூருவிலுள்ள அழகு நிலையத்தில் அப்பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அழகு நிலையத்திற்கு அடிக்கடி வந்து சென்றுகொண்டிருந்த வாடிக்கையாளர் ஷபீர் என்பவருடன் அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரவேற்பாளர் பணியைக் கைவிட்ட அப்பெண், ஷபீரின் உதவியுடன் தனியார் உணவு விடுதியில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
உணவு விடுதியின் பொறுப்பாளராக இருந்த ஷபீரின் சகோதரர் முகமது ரில்வான், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். அப்போது ரில்வான் அப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமியத்திற்கு மாற வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.
மேலும் பணம் தருமாறு அப்பெண்ணுக்கு அழுத்தம் கொடுத்து வந்த ரில்வான் துபாயில் புதிய பணிக்கு விண்ணப்பிக்குமாறு கூறிவிட்டு, பெங்களூருவை விட்டுத் தப்பிச்சென்றுள்ளார். சில தினங்கள் கழித்து ரில்வானுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் - ஐஐடி சென்னை