பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை உள்ளிட்ட 8 இடங்களில் மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் ரெய்டு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று அதிகாலை சோதனை நடத்தினார்கள்.
அப்போது கத்தி, சிகரெட், கஞ்சா, மெமரி கார்டு மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று கூடுதல் ஆணையர் (குற்றம்) சந்தீப் பாட்டில் கூறினார்.
அதேபோல், “பெங்களூருவில் உள்ள சில ரவுடிகளுக்கு சொந்தமான வீடுகளில் பெங்களூரு மேற்கு காவலர்களும், காமாக்ஷிபாலையா, பைத்ரஹள்ளி பகுதியிலும் காவலர்கள் சோதனை நடத்தினார்கள்.
மொத்தம் 105 வீடுகளில் சோதனை நடந்தது. இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க : தங்கம் தங்கமாக குவித்த பாண்டியன் வீட்டில் ரெய்டு