பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம், தனது ஊழியர்களுக்கு மதிய நேரத்தில் தூங்கிக்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் மதியம் 2 முதல் 2:30 மணி வரை அலுவலகத்திலேயே தூக்கிக்கொள்ளலாம்.
இதற்காக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில், "நாசாவின் சமீபத்தைய ஆராய்ச்சியில், 26 நிமிட குட்டித் தூக்கம் உடல் செயல்திறனை 33 விழுக்காடு அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
-
Official Announcement 📢 #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit Solutions (@WakefitCo) May 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Official Announcement 📢 #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit Solutions (@WakefitCo) May 5, 2022Official Announcement 📢 #sleep #powernap #afternoonnap pic.twitter.com/9rOiyL3B3S
— Wakefit Solutions (@WakefitCo) May 5, 2022
இதனடிப்படையில், எங்கள் பணியாளர்களுக்கு உத்தியோகபூர்வ தூக்க நேரத்தை அறிவித்துள்ளோம். இந்த முயற்சியால் எங்கள் ஊழியர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக, உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சொமேட்டோவின் CEO நிறுவன ஊழியர்களுக்கு கொடுத்த அன்புப் பரிசு