இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு உச்சமடைந்துள்ளது. இதில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நோய் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 15 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் கோவிட்-19 பாதிப்புக்குள்ளான 8,483 பேர் தலைமறைவாகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களைத் தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அவை ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அல்லது தவறான எண் எனக் கூறப்படுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மூலம் மற்ற நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளதால் தேடுதல் வேட்டையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'இந்திய தடுப்பூசி கொள்கை சிக்கலை அதிகப்படுத்துகிறது' ராகுல் குற்றச்சாட்டு