ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்! - மேற்குவங்க தேர்தல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

மேற்குவங்கம்
மேற்குவங்கம்
author img

By

Published : Apr 6, 2021, 8:17 AM IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. மூன்று மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு 10 ஆயிரத்து 871 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவருகிறது.

அனைத்தும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறிப்பட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருணமூல் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜக மொத்தமாக 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. இன்று நடைபெறும் தேர்தலில் அந்த மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றிருந்தது. மீதமுள்ள 29 தொகுதிகளில் மம்தாவின் திருணமூல் கைப்பற்றியிருந்தது.

மேற்குவங்கத்தில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஆனால், இம்முறை திருணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையைக் கைப்பற்ற பாஜக கடும் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்த 31 தொகுதிகளில் திருணமூல் தங்களின் வாக்கு விழுக்காட்டைத் தக்கவைக்கும்பட்சத்தில், அக்கட்சி ஆட்சி அமைக்க நிறைய வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மூன்றாம்கட்ட வாக்குப்பதிவில், 39 லட்சத்து 97 ஆயிரத்து 218 ஆண்கள், 38 லட்சத்து 59 ஆயிரத்து 13 பெண்கள் என மொத்தம் 78 லட்சத்து 56 ஆயிரத்து 474 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.