இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் செயல்பட்டுவரும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்தத் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசை, ராகுல் காந்தி கிண்டலடிக்கும் தொனியில் விமர்சித்துள்ளார்.
"ட்விட்டரில் புளூ டிக் நீக்கப்பட்டதற்கு எல்லாம் சண்டை போடுவதில் மோடி அரசு குறியாக உள்ளது. ஆனால் மக்களுக்குத் தடுப்பூசி தேவையென்றால், அவர்களையே தர்சார்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என கைவிடுகிறது. அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்" என, ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 23 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 417 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டவர்கள் 4.61 கோடி பேர்.
இதையும் படிங்க: இந்திய குடிமக்களின் ஆரோக்கியத்தைவிட மத்திய விஸ்டா திட்டம் முக்கியமா?'