பெங்களூரு : முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா பதவி விலகிய நிலையில் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) இரவு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை (Thaawarchand Gehlot ) சந்தித்து பசவராஜ் பொம்மை ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து பசவராஜ் பொம்மை மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புதன்கிழமை காலை 11 மணிக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, “கரோனா நெருக்கடி, வெள்ளப் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மக்களை மீட்க இரவு பகல் பாராது கடுமையாக உழைப்பேன். பொருளாதாரத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு