லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள பாபினா கண்டோன்மென்ட் படை தளத்தில் இன்று (அக். 7) ராணுவ வீரர்கள் டி-90 பீரங்கியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பீரங்கியின் குழல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட தகவலில், உயிரிழந்த ராணுவ வீரர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமர் சிங் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுகந்தா மண்டல் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல காயம் அடைந்த வீரர் உத்தரப் பிரதேச மாநிலம் கலிலாபாத்தைச் சேர்ந்த பிரதீப் சிங் யாதவ் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுவருகிறது. அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோபிமஞ்சூரியன் சாப்பிட மறுத்த மூதாட்டி கொலை... 5 ஆண்டுகளுக்கு பின் பேரன் கைது...