ETV Bharat / bharat

வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து இன்றும் (டிசம்பர் 16), நாளையும் (டிசம்பர் 17) வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள்  வங்கிகள்,நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

author img

By

Published : Dec 16, 2021, 9:32 AM IST

சென்னை: நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. இதனால் வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம்

இது குறித்து அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கிருபாகரன் நேற்று (டிசம்பர் 15) ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ”டிசம்பர் 16, 17 ஆகிய நாள்களில் அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். தற்போது நடைபெற உள்ள கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதால் நாங்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.

இந்தப் போராட்டம் வங்கி ஊழியர்களுக்காக மட்டுமல்ல மத்திய அரசின் மசோதாவால் அங்கு பொதுத் துறை வங்கியின் 80 கோடி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

இந்த மசோதாவால் வங்கியின் வளர்ச்சியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இந்தப் போராட்டம் வங்கி ஊழியர்களுக்கானது மட்டுமல்ல” என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்

”இந்த மசோதாவால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் போராட்டத்திற்குப் பொதுமக்கள் தங்களுடைய ஆதரவைத் தர வேண்டும். வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதுபோல இந்த மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரம் பொதுத் துறை வங்கிக் கிளைகளிலிருந்து சுமார் 90 ஆயிரம் ஊழியர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

மேலும், "பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து நாளை (மார்ச் 16) சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலும், மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இதற்காகத்தான் ரெய்டா? - எடப்பாடி பழனிசாமி சொல்லும் காரணம் இதுதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.