இந்தியாவில் பிப்ரவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நாள் பட்டியலை ரிசர்வ் வங்கி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி,
- பிப்ரவரி 2 : சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கி மூடல்)
- பிப்ரவரி 5 : சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடல்)
- பிப்ரவரி 6 : ஞாயிற்றுக்கிழமை
- பிப்ரவரி 12 : மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
- பிப்ரவரி 13 : ஞாயிற்றுக்கிழமை
- பிப்ரவரி 15 : முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடல்)
- பிப்ரவரி 16 : குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகரில் வங்கிகள் மூடல்)
- பிப்ரவரி 18 : டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கி மூடல்)
- பிப்ரவரி 19 : சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடல்)
- பிப்ரவரி 20 : ஞாயிற்றுக்கிழமை
- பிப்ரவரி 26 : மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
- பிப்ரவரி 27 : ஞாயிற்றுக்கிழமை
இதன்படி இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் பிப்ரவரி மாதத்தில் 12 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு வாய்ப்பு உள்ளது.