மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபரி தஸ்லீம் அலி நேற்று சரமாரியாகத் தாக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதன் பின்னணி குறித்து காவல்துறை முதலில் விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டாதகவும், இதையடுத்தே அவர் மீது அக்கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீடியோ ஆதாரத்தை வைத்து தாக்குதல் நடத்திய கும்பல் மீது மத்தியப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இதில், தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நபர் தஸ்லீமை காவல்துறையினர் விசாரித்தபோது அவர் தனது அடையாளத்தை மறைத்து இரண்டு ஆதார் கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
ஆதார் கார்டு ஒன்றில் தஸ்லீம் என்றும், மற்றொரு கார்டில் அஸ்லீம் என்ற பெயரும் உள்ளது. மேலும் பாதி எரிந்த வாக்காளர் அடையாள அட்டையை காவல்துறை கைப்பற்றியது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டம், போலி ஆவணங்கள் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த விஷயத்தில் மத அடையாளத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றும், மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறை முறையாக விசாரிக்கும் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாரமுல்லாவில் வீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்