ETV Bharat / bharat

Bandi Sanjay Released : வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை! - Bandi Sanjay Bail

10 ஆம் வகுப்பு வினாத் தாள் கசிந்த வழக்கில் கைதான தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Bandi Sanjay
Bandi Sanjay
author img

By

Published : Apr 7, 2023, 12:28 PM IST

ஐதராபாத் : தெலங்கானாவில் 10 ஆம் வகுப்பு இந்தி வினாத் தாள் கசிந்த வழக்கில் கைதான மாநில பாஜக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தெலங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து, வாட்ஸ் அப் மூலம் இந்தி வினாத்தாள் வெளியானது. முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் என்பவர், 10ஆம் வகுப்பு இந்தி வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இருவரும் இதுதொடர்பாக பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் பண்டி சஞ்சய் குமார் வீட்டிற்கு சென்ற போலீசார், தடாலடியாக அவரை கைது செய்தனர். பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடியின் தென் மாநிலங்கள் பயணத்தின் போது தெலங்கானா பாஜக தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பது பழிவாங்கும் செயல் என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பண்டி சஞ்சய் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரம் இந்த வழக்கில் ஜாமீன் கோரி, பண்டி சஞ்சய் குமார் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஜாமின் கோரி வாராங்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பண்டி சஞ்சய் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி நேற்றிரவு (அதாவது ஏப். 6) ஜாமீன் வழங்கினார்.

இதையடுத்து பண்டி சஞ்சய் குமார் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து கரீம்நகர் பகுதியில் கலவரம் ஏற்படும் எனக் கருதப்படும் நிலையில், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கரீம்நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : "நீதிபதி நாக்கை அறுப்போம்" - காங். மாவட்ட தலைவர் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.