செகந்திராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஆகஸ்ட் 21) ஹைதராபாத் சென்றார். அங்கு செகந்திரபாத் பகுதியில் உள்ள மகான் காளி கோயிலுக்குச்சென்றார். கோயிலில் அம்மனை தரிசத்த பின்னர் ஹைதராபாத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமித்ஷா கோயிலுக்குச்சென்று வெளியே வரும்போது, அவரின் செருப்புகளை தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கையில் எடுத்துச்சென்றார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து டிஆர்எஸ் (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி)சமூக வலைதளப்பொறுப்பாளர் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார்.
-
అవును మోదీ జీ,
— krishanKTRS (@krishanKTRS) August 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
మాకు మీ గుజరాత్ గులాంగిరి నుంచి విముక్తి కావాలి...
జై తెలంగాణ#TelanganaPride@KTRTRS pic.twitter.com/MN87JNru0k
">అవును మోదీ జీ,
— krishanKTRS (@krishanKTRS) August 22, 2022
మాకు మీ గుజరాత్ గులాంగిరి నుంచి విముక్తి కావాలి...
జై తెలంగాణ#TelanganaPride@KTRTRS pic.twitter.com/MN87JNru0kఅవును మోదీ జీ,
— krishanKTRS (@krishanKTRS) August 22, 2022
మాకు మీ గుజరాత్ గులాంగిరి నుంచి విముక్తి కావాలి...
జై తెలంగాణ#TelanganaPride@KTRTRS pic.twitter.com/MN87JNru0k
அவர் அதைப்பதிவிட்டவுடன் மற்ற டிஆர்எஸ் தலைவர்களும் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து ட்ரோல் செய்தனர். இந்த வீடியோவைப் பார்த்த தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் கே.டி.ஆரும் ரீட்வீட் செய்தார். இதனைத்தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் குறித்து காரசார விவாதம் நடந்து வருகிறது.
இதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அட்னாகி தயாகரும் பதிலளித்துள்ளார். அவர் இதுகுறித்து தெலங்கானாவின் சுயமரியாதையை பண்டி சஞ்சய் பணயம் வைத்துவிட்டதாகக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதையும் படிங்க:ராமோஜி ராவ் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன்... அமித்ஷா பாராட்டு...