லக்னோ: வாரணாசியில் ஆண்டில் மூன்று மாதம் விற்கப்படும் பனாரஸ் மலையோவின் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் நகரமானது தன்னுடைய மாறுபட்ட கலாசாரத்தால் சர்வதேச அளவில் நற்பெயரைப் பெற்றுள்ளது. பனாரஸ் மலையோ என்ற உணவு பனாரஸின் இன்னொரு பெருமையாக உள்ளது.
ஆண்டின் மூன்று மாதங்கள் கிடைக்கும் இந்தக் குளிர்கால மலையோவிற்காக பனாரஸ் மக்கள் ஆண்டு முழுக்க காத்திருக்கிறார்கள். பால், குங்குமப்பூ, பாதாம் போன்ற பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மலையோ மிகவும் சுவையான உணவாக கூறப்படுகிறது. இதனை உண்பதற்காக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்துகூட மக்கள் வாரணாசி வருகின்றனர்.
பனாரஸின் சோக் பகுதியில் சோகானும்பாவில் உள்ள மார்க்கண்டே சர்தாரின் கடை என்றால் வாரணாசி முழுவதும் தெரியாதவர்களே இருக்க முடியாதாம். இவர்கள் மலையோ தயாரிப்பதில் மிகப்பழமையான கடை எனக் கூறப்படுகிறது. தற்போது பலதரப்பட்ட மலையோ தயாரிக்கப்பட்டாலும், பழங்கால மலையோவிற்கு நிகர் எதுவும் இல்லை என இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகள் தவிப்பு: பிரிந்த குடும்பத்தைத் தேடும் மாற்றுத்திறனாளி பெண்!