மொஹாலி: பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக.24) பஞ்சாப் மாநிலம் மொஹாலி சென்றார். மொஹாலியில், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல்முறையாக பஞ்சாப் வந்தார். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடக்கும் பகுதியில், கத்தி, கத்தரிக்கோல், கால்பந்து, ரசாயனங்கள் உள்ளிட்ட 24 பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல், கறுப்பு நிறத் துணி, கைக்குட்டை, மை, பேனர், கொடி என எந்தவித கறுப்பு நிறப்பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்கு சென்றபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் காரணமாகவே, இன்றைய மொஹாலி பயணத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க:பிரதமர் மோடியின் மொஹாலி பயணம்... பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் பஞ்சாப் அரசு..