டெல்லி: கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை பஜாஜ் ஹெல்த்கேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மருந்தாக 'போசகோனசோல் ஏபிஐ', தயாரித்து சந்தைப்படுத்த குஜராத்தில் உள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் பஜாஜ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
வணிக ரீதியிலான இதன் தயாரிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று பஜாஜ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.