கடந்த ஜனவரி மாதம் 26 டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து பின் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கைதான நடிகர் தீப் சீத்துவின் பிணைகோரிய வழக்கு, வருகிற ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைதாக காரணமாக இருந்த காணொலி:
இதையடுத்து, பாதுகாப்புப்படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம் பெற்றிருந்தது காணொலி மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் தீப் சித்து 14 நாட்கள் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் பிணைகோரி தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்றது.
இதையடுத்து, தீப் சித்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், 'குடியரசு தினத்தன்று காணொலியை வெளியிட்டது தான் தவறு. மற்றபடி விவசாயிகள் செங்கோட்டையில் நடத்திய போராட்டத்திற்கும் தீப் சித்துவிற்கும் தொடர்பில்லை. தீப் சித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைக்கவில்லை.
செங்கோட்டை கலவரத்தில் தீப் சித்து இருந்ததுபோன்று எந்த ஆதாரமும் இல்லை. தீப் சித்து குற்றவாளியல்ல' என்று வாதாடினார்.
இதனைத்தொடர்ந்து, கேட்டுக்கொண்ட நீதிமன்றம், பிணை கோரிய வழக்கை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஊழல் எனும் புற்றுநோய் நம்மை கொல்கிறது - சார் பதிவாளர் இடமாற்றம் தொடர்பான கருத்தில் நீதிமன்றம் கருத்து