கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் சாம்ஷி கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர், தனது செல்ல பிராணிக்கு சீமந்தம் நடத்தி அழகு பார்த்துள்ளனர். கர்ப்பம் தரித்துள்ள லூசி என அழைக்கப்படும் நாய்க்கு, பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அந்தக் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். நாய்க்கு மலர் சூட்டி, வளையல்கள் அணிவித்து குடும்பத்தில் ஒருவர் போல், விழாவை நடத்தினார்கள். நாய்க்கு சீமந்தம் நடத்தப்பட்டது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.