ETV Bharat / bharat

தாயின் இறுதி மூச்சில் பிறந்த பெண் குழந்தை - சாலையில் நிகழ்ந்த சோகம்! - Baby girl in road accident

உத்தர பிரதேசத்தில் விபத்துக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர், தனது இறுதி மூச்சு அடங்குவதற்குள் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தாயின் இறுதி மூச்சில் பிறந்த பெண் குழந்தை - சாலையில் நிகழ்ந்த சோகம்!

author img

By

Published : Jul 21, 2022, 5:07 PM IST

ஆக்ரா (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தனௌலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு - காமினி தம்பதி. மனைவி காமினி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூலை 20) பசிர்பூர் கோட்லா கிராமத்தில் உள்ள காமினியின் வீட்டிற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பர்த்ரா கிராமத்தை அடைந்தவுடன் ஒரு டிரக் பைக்கில் மோதியது. தொடர்ந்து கீழே விழுந்த காமினி மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். ஆனால் தான் இறப்பதற்கு முன் சாலையில் வைத்து காமினி, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காமினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் ராமு சிகிச்சைகாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சப் - இன்ஸ்பெக்டர் மீது வேன் ஏற்றிய கடத்தல்காரர்கள் - ராஞ்சியில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.