ஹைதராபாத்: டெல்லியில் செயல்பட்டுவரும் பிரபல 'பாபா கா தாபா' உணவகத்தின் உரிமையாளர் காந்தா பிரசாத். இவரின் பெயரில் கடந்தாண்டு ஒருவர் வலையொளி (யூ-ட்யூப்) ஒன்றை தொடங்கி பெரும் புகழ்பெற்றவராக மாறினார். இது பெரும் சர்ச்சையானது, இது தொடர்பாக பாபா கா தாபா காந்தா பிரசாத் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்தார்.
இந்நிலையில் மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரிகளை உட்கொண்டு காந்தா பிரசாத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவரது மகன் கூறுகையில், “கடந்தாண்டு அவர் பெரும் புகழ் பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்திருந்தனர்.
இதன்மூலம் நாங்கள் மால்வியா நகரில் தாபா உணவகம் ஒன்றை ஆரம்பித்தோம். தற்போது அவர் மிகவும் நெருக்கடியில் இருந்துவந்தார். உணவகத்தை மூட வேண்டும் என்று பொதுமுடக்க காலத்தில் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இந்த புதிய உணவகத்தை காட்டிலும் பழைய உணவகத்தில் செலவுகள் குறைவாக காணப்பட்டன. சுருக்கமாக கூறினால், பழைய உணவகத்தில் நல்ல லாபம் கிடைத்தது. இந்த நிதி நெருக்கடி காரணமாக அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். அவருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: பாபா கா தாபா பெயரில் பண மோசடி செய்த யூடியூபர் மீது வழக்குப்பதிவு