ETV Bharat / bharat

ஒரு ஆட்டோவில் 26 பயணிகள் : அதிர்ந்த காவல்துறை! - உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்

உத்தரப்பிரதேசத்தில் 26 பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டேவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்
ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்
author img

By

Published : Jul 11, 2022, 6:44 PM IST

Updated : Jul 11, 2022, 6:50 PM IST

லக்னோ (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேசம் ஃபதேபூர் பிண்ட்கி கோட்வாலி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி நிறுத்தினர்.

ஆட்டோவில் இருந்தவர்களை வெளியே வருமாறு காவலர்கள் கூறியதையடுத்து, பெரியவர்கள், குழந்தைகள் என ஆட்டோவில் இருந்து 26 பேர் வெளியே வந்தனர். ஓட்டுநர் உள்பட 27 பேர் ஒரே ஆட்டோவில் பயணித்துள்ளனர். ஒரு ஆட்டோவில் அதிகபட்சமாக 6 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற நிலையில், அதிக பாரம் ஏற்றி வந்ததாக ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்

ஆட்டோவில் இருந்து பயணிகள் வெளியே வருவதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் இளைஞர்கள் அட்டூழியம்: அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் மீது தாக்குதல்!

Last Updated : Jul 11, 2022, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.