பெண்கள் வீட்டின் சமைலறையில்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, தற்போது விண்ணிற்கே செல்லும் அளவு உயர்ந்துள்ளனர். பல துறைகளில் ஆண்களை மிஞ்சி பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகின்றனர். அதற்குக் காரணம், ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட்டதுதான்.
அதனை மேலும் வலியுறுத்தும்விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26ஆம் தேதி பெண்கள் சமத்துவ நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
![பெண்களுக்கு சம உரிமை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1629940608-7631_2608newsroom_1629941674_358.jpg)
உருவானது எப்படி?
அமெரிக்காவில் 1920 ஆகஸ்ட் 26 அன்றுதான், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்பதை வலியுறுத்துவிதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26ஆம் தேதி பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
![ஆணாதிக்க சமுதாயத்தை வென்றெடுத்த நாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12878313_equal.jpg)
ஆணாதிக்கச் சமுதாயம்
பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் நோக்கிலும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆணாதிக்கச் சமுதாயத்தை வென்றெடுத்த நாள் எனவும் கூறலாம்.
இதையும் படிங்க: மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா?