ETV Bharat / bharat

உமேஷ் பால் கொலை வழக்கு : பிரபல தாதா அடிக் அகமதுக்கு ஆயுள் தண்டனை!

உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தரபிரதேச தாதா அடிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் எம்.எல்.ஏ - எம்.பி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

author img

By

Published : Mar 28, 2023, 2:36 PM IST

Etv Bharat
Etv Bharat

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் போலீசார் பாதுகாப்பு வளையத்தில் இருந்த உமேஷ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடி அடிக் அகமதுக்கு ஆயுள் தண்டனை வித்தித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே அத்திக் அகமது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கு, சிறையில் இருக்கும் அத்திக் அகமதுவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டது. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு உமேஷ் பாலை, அடிக் அகமதுவின் கும்பல் கடத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மர்ம நபர்களால் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அத்திக் அகமதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டடது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், உமேஷ் பால் படுகொலை சம்பவம் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், மாநிலத்தை ரவுடிகளை வளர்த்து விட்டது சமாஜ்வாதி கட்சி தான் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்கட்சித் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த உமேஷ் பால் கொலை வழக்கில் இருவரை துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்ற போலீசார் மீதமுள்ளவர்களை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சிறையில் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாகவும் கூறி அடிக் அகமது தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது.

உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பான வழக்கு பிரயாக்ராக் எம் எல் ஏ - எம் பி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடிக் அகமதுவை குற்றவாளி என அறிவித்தனர். அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் அடிக் அகமது தவிர, தினேஷ் பாசி மற்றும் கான் சவுலத் ஹனிப் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அடிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உள்பட மற்ற ஏழு பேர் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : "மகிழ்ச்சியான நினைவுகள்" - அரசு பங்களாவை விட்டு வெளியேறுகிறேன் - ராகுல் காந்தி உதிர்த்த வார்த்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.