ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான பாய்மர படகு தகுதி போட்டி ஓமனில் நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா முதல் இடம் பிடித்தார்.
வேலூரைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் இரண்டாவது இடம் பிடித்தார். இரட்டையரில் சென்னையைச் சேர்ந்த கணபதி, வருண் ஆகியோர் முதல் இடம் பிடித்தனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் நான்கு பேர் முதன் முறையாக தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, ஆண்டுக்கு ரூ. 25 லட்சம், ரூ. 10 லட்சம் பணமும் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: IPL 2021: ஹாட்ரிக் வெற்றி, முதல் கோப்பை: இரு கனவுகளுடன் மும்பை - ஆர்சிபி பலப்பரீட்சை