ETV Bharat / bharat

கோபத்தில் ராகுல் வெளிநடப்பு: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பரபரப்பு - நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்

டோக்லாம் எல்லையில் இந்திய - சீனப் படையினரின் மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய தன்னுடைய கோரிக்கை ஏற்கப்படாததால் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திலிருந்து ராகுல் காந்தி வெளிநடப்புச் செய்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Jul 14, 2021, 10:01 PM IST

டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 14) டெல்லியில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பாதுகாப்புத் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அதில், டோக்லாம் எல்லையில் இந்திய - சீன படையினரின் மோதல், தேசிய பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதம் நடத்த ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்தார்.

ஆனால், அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் ராகுல் காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தது நிலைக்குழுவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கரோனா விதிமுறை மீறல்: மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.