திருவனந்தபுரம்(கேரளா): கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வட்டியார்காவு பகுதியை சேர்ந்தவர் 8 வயதே ஆகும் சிறுமி த்வானி. இவர் உலக சாதனை புத்தகங்களில் பல சாதனைகளை செய்து இடம்பிடித்துள்ளார். இந்த வரிசையில் பல சாதனைகளை செய்துள்ளார்.
இதில் முதன் முதலாக “நான் இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்ற வார்த்தையை 25 மொழிகளில் கூறி ஜாக்கி புக் ஆஃப் வெர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இதனையடுத்து ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்திலும், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளார். அவரது சாதனை வரிசையில் அடுத்ததாக 22 கதைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் 23 நிமிடங்களில் கூறி சாதனை படைத்தார்.
இந்த வரிசையில் தற்போது 95 கவிதைகளை தொடர்ந்து வாசிக்க இருக்கிறார். இவரது தந்தை ஆதர்ஷ் மற்றும் தாய் லட்சுமி ஆகியோர் சிறுமிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் இவரது வீடியோக்கள் யுட்யூப் வலைத்தளப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:Exclusive:'ஆடைக்காக விமர்சித்தவர்கள்; இப்போது பாராட்டுகிறார்கள்' - தங்கம் வென்ற வீராங்கனை நிகத் ஜரீனின் தந்தை உருக்கம்!