மேஷம்: உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருந்து, அவர்கள் மனதை வெல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில காரணங்களுக்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இப்படியான உணர்வு இருக்காது. எனினும், புதிய நண்பர்கள் உடன் விருந்துக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: இன்றைய தினம் சில அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்க்கப்பட்டபடி எதுவும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால், கடவுளின் ஆசி காரணமாக, இந்த நிலைமையை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள். மாலையில் நிலைமை மேம்படக் கூடும். பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாமல் இயல்பு நிலை ஏற்படும்.
மிதுனம்: இன்று, நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் உங்களது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களும், தங்கள் உணர்வுகளை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். திருப்தியான உணர்வு ஏற்படும். மேலும், இன்றைய தினத்தில், வேடிக்கையும் குதூகலமும் இருக்கும்.
கடகம்: பணியிடத்தில், சிறந்த கூட்டாளி உறவை ஏற்படுத்தும் திறமை காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். ஆனால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனை முழுமையாக படித்து அறிந்து கொள்வது நல்லது. ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும்போது கவனமாக செயல்படுவது முக்கியம்.
சிம்மம்: பழைய நண்பர்களுடன் உள்ள தொடர்பை புதுப்பித்து கொள்ளவும், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் சிறந்த நாளாகும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தரக்கூடும். அதனால், வீட்டில் மகிழ்ச்சி நிலவும். விருந்தினர்களுக்கு சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி: உணர்வுரீதியான தாக்கங்களின் காரணமாக, இன்று உறவுகள் பாதிக்கப்படலாம். உங்கள் மனதில் குழப்பம் அதிகம் இருக்கும். உணர்ச்சியுடன் நீங்கள் போராடிக் கொண்டு இருப்பீர்கள். எனினும், மற்றவர்கள் கருத்தின்படி நடப்பதைவிட, உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது.
துலாம்: எந்த பணியையும் செய்யும் போதும் கூடுதல் கவனம் தேவை. வர்த்தக ஆலோசனை என்றாலும், கூட்டங்கள் என்றாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள். மக்களை தொடர்பு கொள்வது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. எனினும், மாலைப்பொழுது உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.
விருச்சிகம்: உறவுகளை அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பீர்கள். இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனமுடன் செயல்படவும்.
தனுசு: இன்று கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், சிறந்த நாளாக இருக்கும். உங்களது செயல்திறன் காரணமாக பாராட்டு பெறுவீர்கள். பணியில் எந்த விதமான சவால்கள் வந்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் அனைவரது மனங்களையும் வெல்வீர்கள். இன்று சிறந்த நாள்.
மகரம்: இன்று, பணியிடத்தில் அங்கீகாரமும் பாராட்டும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால், புதிய பணிகளில் வரும் சோதனைகளை திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்: இன்று, கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாக சோர்வாக உணர்வீர்கள். ஆனால், மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக, சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பு தெரியும்.
மீனம்: உங்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நண்பர்களே உங்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள்.
இதையும் படிங்க: ’காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு உரிமை உண்டு’ - தமிழிசை சௌந்தரராஜன்