மேஷம் : உங்களது தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒன்றை ஏற்படுத்துவீர்கள். உங்களது பேச்சுத்திறன் அனைவரையும் கவருவதாக இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் சிறிய விபத்து அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் : இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் குதூகலமும் மகிழ்ச்சியும் இருந்தாலும், நீங்கள் இன்று செய்யும் பணியின் மீது கவனம் செலுத்துவீர்கள். பின்னர் உங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்று அவர்களுடன் உரையாடி, மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.
மிதுனம் : இன்று, பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், அவர்களை திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும் ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.
கடகம் : இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும் பொழுது போக்கும் இருக்கும். சமூக துறை தொடர்பான வர்த்தகத்தில், வெற்றி கிடைக்கும்.
சிம்மம் : பல்வேறு மக்கள், உங்களை பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அது குறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி : இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தை கழிக்கலாம். கோயிலுக்கு சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.
துலாம் : இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாலை வரை, உங்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால், அனுமானிக்க முடியாத வகையில் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனை எதிர்கொள்ள, மனதை தயார்படுத்திக் கொள்ளவும்.
விருச்சிகம் : இன்று, காதல் உறவானாலும் சரி அல்லது உங்கள் மேலதிகாரி ஆனாலும் சரி, அவர்கள் மனதை வெல்ல சரியான நேரமாகும். உங்கள் உணர்ச்சிகளை அவர்களிடம் வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், திட்டமிட்ட வகையில் பணிகளைத் தொடங்குவீர்கள்.
தனுசு : இன்று, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் அது கிடைக்காமல் போகாது. அதனால் ஏமாற்றம் அடைய வேண்டாம். அது உங்கள் பணியை பாதிக்கும். நல்லதை நினைத்து, பொறுமையாக காத்திருக்கவும்.
மகரம் : உங்களது வெற்றி, உங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும். இதன்மூலம் எந்தவித கடினமான நிலைமையை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது. எனினும், உங்கள் சாதனைக்கு கடின உழைப்பு முக்கியமான காரணமாக இருந்து வந்துள்ளது. நண்பர்கள் உங்கள் செயல்திறனையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையையும் பாராட்டுவார்கள்.
கும்பம் : இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது உறுதியான நடவடிக்கை காரணமாக, போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பீர்கள். சந்தேகங்களும் கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.
மீனம் : நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.
இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!