மேஷம்
நீங்கள் கற்பனை வளம் மிக்கவர் என்பதால், அனைவரையும் மகிழ்விப்பீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், நீங்கள் செய்ய முடியும் அளவைவிட, அதிகமான அளவு பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்குத் திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.
ரிஷபம்
நீங்கள் இன்று, பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாக நேரத்தைக் கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கக் கூடும். இன்று முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள்.
மிதுனம்
இன்று, சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும் பதற்றமும் ஏற்படும். உங்கள் கவலைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பைப் பெறுவீர்கள். எங்கள் பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கடகம்
இன்று நீங்கள் புதிய உணவு வகைகளைத் தயாரிப்பீர்கள். அதனை குடும்ப உறுப்பினர்கள், மிகவும் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்வார்கள். பழைய நினைவுகளில் நீங்கள் மூழ்கக் கூடும். விருந்தினரின் வருகையால், சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
சிம்மம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் கருத்தைக் கேட்டு அறிவீர்கள். அப்போது நீங்கள், ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
கன்னி
இன்று நீங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்ள நேரம் செலவழிக்க வேண்டும். பணியிடத்தில் சில கசப்பான உணர்வுகள் ஏற்படக்கூடும். அதனால் எச்சரிக்கையாக இருந்து, பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. காதல் உறவைப் பொறுத்தவரை, புதிய காதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
துலாம்
சிறிய விஷயங்கள் அல்லது பிரச்சினைகள் குறித்துச் சிந்தித்து, மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மன அமைதியைப் பெற யோகா அல்லது தியானம் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் சில விஷயங்கள் தொடர்பாக நெருக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது சாதக மற்றும் பாதகமான நிலைகளைக் கவனமாக ஆராய்ந்த பிறகு எடுக்க வேண்டும்.
விருச்சிகம்
நீங்கள் இன்று, மிகச் சரியாக வேலை பார்க்கும் திறன் உடையவர் என்று போற்றப்படுவீர்கள். பணியில், குறிப்பிட்ட நெறிமுறைகளை மிகச் சரியாகப் பின்பற்றி, நேரம் தவறாமல் நடந்துகொள்வீர்கள். உங்கள் சுற்றியிருப்பவர்களுக்கு, ஒரு உதாரணமாகத் திகழ்வீர்கள்.
தனுசு
இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் நீங்கள் காதல் வயப்படுவீர்கள். எனினும் இது கவர்ச்சியின் காரணமாக வந்த ஈர்ப்பாக இருக்கலாம். தொடக்கக் கால உறவை, கவனத்துடன் கையாளாமல் இருந்தால் உறவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களது புகழைப் பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மகரம்
நீங்கள் தேனீயைப் போல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால், உங்களைப் பற்றி நினைக்க உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் கற்பனைத் திறனுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால் வேலை அதிகமிருப்பதால், அதற்கான சுதந்திரம் இருக்காது. நேர நிர்வாகம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டுச் செயல்படுவதால், வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது.
கும்பம்
இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சிறியது முதல் பெரியது வரை உங்களது அனைத்துத் திட்டங்களும், நடைமுறைக்கு வரும். உங்கள் பாதையில் தடைகள் ஏதும் இருந்தால் மனம் தளர வேண்டாம்; சோதனைகள் அனைத்தையும் கடந்து, நீங்கள் வெற்றியாளராக இருப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
மீனம்
கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லாத காரணத்தினால், புதிய திட்டங்கள் எதையும் இன்று தொடங்குவது நல்லது அல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்டத்திலும், பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வர்த்தகத்தில் இருப்பவர்கள், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கடவுளின் ஆசியால், உங்களது வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.
இதையும் படிங்க: ஆடி சனிப் பிரதோஷத்தில் சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள்!