அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அகில் கோகாய் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். வன்முறையைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாகக் கூறி சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா சட்டம்) அவர் கைதுசெய்யப்பட்டார்.
அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை
46 வயதான அகில் கோகாய் மீதான வழக்கு விசாரணை கவுஹாத்தி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அகில் கோகாய் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடிசெய்து வழக்குகளிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இதையடுத்து அகில் கோகாய் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அரசு சார்பில் அகில் கோகாய்க்கு மேல்முறையீடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
சிறையிலிருந்தபடியே வெற்றி
2021ஆம் ஆண்டு அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறையிலிருந்தே போட்டியிட்ட அகில் கோகாய், சிவ்சாகர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கட்சித் தாவல் குறித்து நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும்’ - உச்ச நீதிமன்றம்