ஹாங்சோவ்: ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகின்றது. இதில் இந்தியா, சீனா, நேபாளம், ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஹாங்காங் உட்பட 45 நாடுகளை சார்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இப்பேட்டின் தொடரின் 6ஆவது நாளான இன்று தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, பாலம், செஸ், சைக்கிள் ஓட்டுதல், ஈஸ்போர்ட்ஸ், கோல்ஃப், ஹேண்ட்பால், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், நீச்சல், மற்றும் டென்னிஸ் ஆகிய 16 போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியின் 5வது நாளான நேற்று இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்க பதக்கம், மற்றும் வுஷு விளையாட்டில் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 6 தங்கம் , 8 வெள்ளி ,11 வெண்கலப் பதங்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் 90 தங்கம், 51 வெள்ளி, 26 வெண்கலம் வென்று 167 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 24 தங்கம், 23 வெள்ளி, 39 வெண்கலம் வென்று 86 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 18 தங்கம், 30 வெள்ளி, 30 வெண்கலம் வென்று 78 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. 6 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம் வென்று 31 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் நான்காம் இடத்தில் உள்ளது.
தொடர் ஆதிக்கம் செலுத்தும் சீனா: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஆரம்பத்தில் இருந்தே சீனா பதக்க பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா கிட்டதட்ட 300 பதக்கங்களை வெற்று ஆதிக்கம் செலுத்தியது.
அப்போது சீனாவுக்குப் போட்டியாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் விளங்கின. ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு பேட்டியில் சீனாவின் பதக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு பதக்கத்தை வென்று தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2 மற்றும் 3ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐசிசி உலகக் போப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. அக்சருக்கு பதிலாக களமிறங்கும் அஸ்வின்!