ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் ஆண்கள் ஹாக்கியில் லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியை 16க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
-
The 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
They've aced the group stage opening match with their exceptional performance after defeating Team 🇺🇿 Uzbekistan. Let's keep the momentum going as we move forward in the competition! 💪
Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/MMjsGWXbBB
">The 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023

Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/MMjsGWXbBBThe 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023
They've aced the group stage opening match with their exceptional performance after defeating Team 🇺🇿 Uzbekistan. Let's keep the momentum going as we move forward in the competition! 💪
Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/MMjsGWXbBB
ஹாக்கி போட்டியின் ஆண்கள் பிரிவில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று உள்ளன. இவற்றில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்களதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் தென் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா, அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஹாக்கி ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் இந்திய அணி உஸ்பெகிஸ்தான் அணியை 16-க்கு 0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தில் அபார வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய முதல் 15 நிமிட சுற்றில் இந்தியாவுக்காக லலித் மற்றும் வருண் கோல் அடித்து தங்கள் புள்ளி கணக்கைத் தொடங்கினர்.
இதன் மூலம் இந்தியா 2-க்கு 0 என முன்னிலை வகித்தது. அதன்பின், அபிஷேக், மன்தீப் கோல் அடிக்க, இரண்டாவது 15 நிமிடத்தில் இந்தியா 4-க்கு 0 என முன்னிலை வகித்தது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்த கோல் அடிக்க முதல் பாதி நேர முடிவில் 7-க்கு 0 என முன்னிலை வகித்தனர்.
மூன்றாவது 15 நிமிடத்தில், இந்திய வீரர் வருண் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்பை ஸ்ட்ரோக்காக மாற்றினார். இதன் மூலம் மூன்றாவது காலிறுதியில் என 12-0 என்ற மாபெரும் முன்னிலை வகித்தது. பின்னர் தொடங்கிய 4 சுற்றில் சுக்ஜீத் மற்றும் ரோஹிதாஸ் அடுத்தடுத்து கோல் மழையைப் பொழியவே போட்டியின் முடிவில் இந்திய அணி 16-க்கு 0 என்ற கணக்கில் மாபெரும் வெற்றி பெற்றது.
-
The 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
They've aced the group stage opening match with their exceptional performance after defeating Team 🇺🇿 Uzbekistan. Let's keep the momentum going as we move forward in the competition! 💪
Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/6c2E5vZ6h1
">The 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023
They've aced the group stage opening match with their exceptional performance after defeating Team 🇺🇿 Uzbekistan. Let's keep the momentum going as we move forward in the competition! 💪
Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/6c2E5vZ6h1The 🇮🇳 Men's Hockey Team shines in the group stage! 🏑🇮🇳
— SAI Media (@Media_SAI) September 24, 2023
They've aced the group stage opening match with their exceptional performance after defeating Team 🇺🇿 Uzbekistan. Let's keep the momentum going as we move forward in the competition! 💪
Go #TeamIndia💪🏻🏑#Cheer4India… pic.twitter.com/6c2E5vZ6h1
உலக ஹாக்கி தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. உஸ்பெகிஸ்தான் அணி உலக தரவரிசையில் 15 இடத்தில் இருக்கிறது. ஆண்கள் ஹாக்கி பேட்டி இன்று தொடங்கிய நிலையில் நாளை மறுநாள் (செப். 26) மகளிர் ஹாக்கி போட்டிகள் தொடங்குகின்றன.
மகளிர் ஹாக்கியில் 10 அணிகள் களமிறங்க உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, கொரியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் அணிகளும், பி பிரிவில் ஜப்பான் சீனா, தாய்லாந்து, கஜகிஸ்தான், இந்தோனேசிய அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளன. இந்திய மகளிர் ஹாக்கி அணியும் ஆசிய அளவில் நம்பர் 1 அணியாக உள்ளது.
இதையும் படிங்க: Ind Women Vs Ban Women : ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட் : அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய மகளிர்!