ஆக்ரா: கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து, தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவின் செங்கோட்டை உள்ளிட்ட நாட்டின் அனைத்து நினைவுச்சின்னம் உள்ள இடங்களும் மே 15 வரை மூடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த நேரத்தில், தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள ராயல் கேட் அருகே சேதமடைந்த கற்கள் மாற்றப்படுவதற்கும், தாஜ்மஹால் கோபுரத்தை பராமரிக்கவும் திட்டமி்டப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தை பிரகாசமாக்க, களிமண் பூச்சு பூசுவதற்கான செயல் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
மே 15 வரை மூடப்படும்
மார்ச் 17, 2020 அன்று தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நினைவுச்சின்னங்களும் மூடப்பட்டன. 188 நாட்களுஙக்கு பின்னர், 2020 செப்டம்பர் 21 அன்று தாஜ்மஹால் திறக்கப்பட்டது.
கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏப்ரல் 15 அன்று, தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்களை இரண்டாவது முறையாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மூடுவதாக அறிவிடத்தது.
வாயிற்பகுதியில் உள்ள சேதமடைந்த கற்கள்
ஊரடங்கின் போது, ராயல் கேட்டில் சேதமடைந்த கற்களை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன கண்காணிப்பு தொல்பொருள் நிபுணர் வசந்த் குமார் ஸ்வர்ணாகர் தெரிவித்துள்ளார். இதற்கு சுமார் ரூ .19 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் தாஜ்மஹாலின் தென்மேற்கு கோபுரத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, சாரங்களை அகற்றுவதற்கான பணிகளும் நடைபெறும்.
ராயல் கேட் விலைமதிப்புமிக்க கற்களால் மாற்றப்படும்
நினைவுச்சின்னத்தின் அழகை அதிகரிக்க செய்யும் ராயல் கேட், தாஜ்மஹாலின் பிரதான வாயில் ஆகும். ராயல் கேட்டில் சிவப்பு மற்றும் பிற வண்ணங்களின் விலைமதிப்பற்ற கற்கள் அனைத்தும் கலை இழந்துள்ளது. இந்நிலையில், சாரங்கள் மூலம் ராயல் கேட் சரி செய்யப்படுகிறது. மன்னர் ஷாஜகான் கட்டியுள்ள இந்த வாயிலின் வரலாறு தாஜ்மஹால் அளவிற்கு சரித்திரம் வாய்ந்தது.
அழகு சேர்க்கும் நான்கு கோபுரங்கள்
தாஜ்மஹால் கட்டும் நேரத்தில், இந்த நான்கு கோபுரங்களும் அதன் நான்கு மூலைகளிலும் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோபுரத்தின் உயரமும் தரையில் இருந்து உச்சிவரை 42.95 மீட்டர் அல்லது 140.91 அடி.
தாஜ்மஹாலில் பயன்படுத்தப்பட்ட பளிங்குகளே இந்த கோபுரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் அழகை மேலும் அதிகரிக்க இந்த கோபுரங்களே காரணம். தாஜ்மஹாலின் தென்மேற்கு கோபுரத்தைப் பாதுகாக்கும் பணிகளும் நடந்து வருவதாக ஸ்வர்ணக்கர் தெரிவித்தார். ஓரத்தில் பெயர்ந்த கற்கள் மற்றும் கோபுரத்தின் வெளிப்புறத்தில் உள்ள மொசைக் ஆகியவை மாற்றப்படவுள்ளது.
கோபுரங்களை சரிசெய்வதற்கு 23 லட்சம் செலவாகும்
கோபுரங்களின் பராமரிப்பு பணிகளுக்கு சுமார் ரூ.23 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலையில், கோபுரத்தின் சேதமடைந்த கற்கள் மாற்றப்படும். இணைப்புகளில் உள்ள கறுப்புக் கற்களும் மாற்றப்படுகின்றன. கோபுரத்தில் களிமண் பூச்சு செய்தபோது, மொசைக் மற்றும் ஓரக்கற்கள் சிதைந்து வெளியே விழுந்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஊரடங்கு காலத்திற்குள், தாஜ்மஹாலின் தென்மேற்கு கோபுரத்தின் பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டால் தான் சாரங்களை அகற்ற முடியும்.
குவிமாடத்தில் களிமண் பூச்சு பராமரிப்பு
தாஜ்மஹாலின் முக்கிய குவிமாடம் இரட்டை குவிமாடத்தில் உள்ளது, இது உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட விலைமதிப்பற்ற கற்களால் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் பிரதான குவிமாடத்தின் களிமண் பூச்சு தான் மிக முக்கியமான பணி. ஒரு தொல்பொருள் ஆய்வாளர் கூறுகையில், களிமண் பூச்சு சரியான நேரத்தில் முடிந்தால், சுற்றுலாப் பயணிகள் அழகான தாஜ்மஹாலைக் காண வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறை இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பாராட்டத்தக்க முயற்சி
சுற்றுலா கில்ட் ஆக்ரா துணைத் தலைவர் ராஜீவ் சக்சேனா, "நினைவுச்சின்னங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது" என்று கூறினார். கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் ரயில்வே தங்கள் ரயில் தடங்களை பழுதுபார்த்த விதம் மிகவும் பாராட்டப்பட்டது. அதேபோல், இந்த ஊரடங்கின் போது, நினைவுச்சின்னங்களை பராமரிக்கும் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் செய்ய முடிந்தால், அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
தோடர் மால் பரதாரி பராமரிப்பு
முகலாய பேரரசர் அக்பரின் நிதி மந்திரி ராஜா தோடர்மால் நவரத்னங்களில் ஒருவர். தோடர்மால் மன்னரின் பிறப்பு ஜனவரி 1, 1500 என்று கூறப்படுகிறது. அக்பரின் ஆட்சிக் காலத்தில் நிலஅளவிடும் முறையை அவர் உருவாக்கினார். தோடரமாலின் பரதாரி கட்டடம் ஃபதேபூர் சிக்ரியில் பாதுகாக்கப்படுகிறது. பரதாரி என்றால் எல்லா பக்கங்களிலிருந்தும் சுவர் மூடப்பட்டிருக்கும். முன்னதாக, இந்த பரதாரி புறக்கணிக்கப்பட்டது. ஆனால் சமீபத்திய அகழ்வாராய்ச்சியின் போது, பரதாரியில் ஒரு நீர்த்தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, இது சுமார் 450 ஆண்டுகள் பழமையானது, அதன் கட்டிடக்கலை ஆச்சரியமாக இருக்கிறது.
தோடர்மால் பாகவத புராணத்தை மொழிபெயர்த்தவர்
இந்த நீர்த்தேக்கத்தின் நீரூற்று சிவப்பு மணற்கற்களால் ஆனது. நீரூற்றின் குழாய் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உலோகம் என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரதாரியைப் பராமரிக்கும் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தோடர்மால் மன்னர் பாகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்ததாகக் கூறப்படுகிறது.
களிமண் பூச்சு என்றால் என்ன?
களிமண் பூச்சு என்பது உண்மையில் மண் பூச்சு ஆகும். இந்த பசை போன்ற மண்ணை கல்லில் தடவி பின்னர் தண்ணீரில் கழுவப்படுகிறது. இந்த வகையில் சுத்தம் செய்வதற்கு எந்த இரசாயனமும் பயன்படுத்தப்படுவதில்லை, எனவே, இது கல்லுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. இந்த பூச்சை முகத்தில் பூசுவதால் முகம் பொலிவடைவதை போல இந்த மண்பூச்சிற்கு பின்னர் தாஜ்மஹாலும் ஒளிரும். தாஜ்மஹாலுக்கு இதற்கு முன்னரும் இதுபோன்ற களிமண் பூச்சு பூசப்பட்டுள்ளது.